சிறிலங்காவில் கொரோனா உற்பத்தி! சுகாதார அமைச்சின் தற்போதைய செயலாளர் பதவி பறிப்பு

சுகாதார அமைச்சின் தற்போதைய செயலாளரை நீக்கிவிட்டு முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவை சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்குமாறு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்றையதினம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில்,

சுகாதாரத்துறை செயற்படவில்லை, மக்கள் விரக்தி நிலையில் உள்ளனர்.

இதன் காரணமாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சஞ்ஜீவ முனசிங்கவிற்கு வேறு ஒரு பொருத்தமான பதவியை வழங்கிவிட்டு, சுகாதார அமைச்சை அழிக்காமல் பொருத்தமான ஒருவருக்கு அமைச்சின் செயலாளர் பதவியை வழங்குங்கள்.

முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தற்போது மரங்களை நடுகின்றார்.

மருத்துவத் துறையில் அனுபவம் மிக்க, நிபுணத்துவம் மிக்க ஒருவர் மரங்களை நடுகின்றார் என்றால் அது அவரது திறமையை வீணடிக்கும் செயலாகும் என்றார்.