காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் மீது பகிரங்க குற்றச்சாட்டு

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் மீது பகிரங்க குற்றச்சாட்டு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கம் கொலையாளிகளை நீதிபதிகளாக சித்தரிக்கின்றனர் எனவும்,

சிறீலங்காவின் காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தோடு பிரதான விருந்தாளிகளாக களமிறங்கியுள்ளனர் எனவும் அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது

காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தோடு விருந்தாளிகளாக செயற்பட தொடங்கியதன் பின்னர் யாழிலும் மட்டகளப்பிலும் அலுவலகம் திறக்கப்பட்டு பல நூற்று கணக்கான காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சங்கத்தின் ஏற்பாட்டில் மறைமுகமாக மரணச்சான்றிதள் வழங்கப்பட்டு வருவதாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போரட்டத்தினை கோட்டா அரசின் பக்கம் திசை திருப்பும் வகையில் சங்கத்தின் செயற்பாடு அமைந்துள்ளது எனவும் அத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கட்டுள்ளதாவது

நீதிகோருதல்,இனவழிப்புக்குற்றங்கள் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் ,போர் குற்றங்களில் ஈடுபட்ட சிறீலங்கா அரசை அனைத்துலக விசாரணைக்கு கொண்டு செல்வதை இலக்காக கொண்டு செயற்படும் அமைப்பே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பு.

எமது அமைப்பை பொறுத்தவரையில் சிறீலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதையே பிரதான இலக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதிகோருதல் மட்டுமன்றி ,இனவழிப்புக்குற்றங்கள் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர் குற்றங்களில் ஈடுபட்ட சிறீலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்பதில் உறுதியாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது

இவ்வாறான உறுதியான நிலைப்பாட்டை கொண்ட எமது அமைப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோருதல் மற்றும் இன அழிப்பு குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் ஆகிய விவகாரங்களை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்திற்கு,அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் ஊடாக விசாரணைக்காக சர்வதேச சமூகம், ஐ.நா.மனித உரிமைகள் பேரவை பரிந்துரை செய்ய வேண்டுமென வலியுறுத்தி
வடக்கு கிழக்கு தழுவிய கவனயீர்ப்புப்போராட்டம் ஊடாக வெளிப்படுத்தி வருகின்றோம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு அனைத்துலக குற்றவியல் விசாரணை மற்றும் அனைத்துலக நீதி பொறிமுறை ஊடாகவே அவர்களை கண்டுபிடிக்க முடியும் என்பதில் உறுதியாகவுள்ளோம்.

எங்கள் போராட்ட இலக்கு சிறீலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்திற்கு, அல்லது அனைத்துலக நீதி பொறிமுறைக்குள் கொண்டு செல்வதாகும்.

இது இவ்வாறு இருக்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக போராட்டத்தை கையிலெடுத்து உருவான “காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உறவினர்கள் சங்கம்” 2017 ஆண்டுக்குப்பின்னர் அரசின் நிரந்தர கைக் கூலிகளாக மாற்றம் பெற்றுள்ளனர் .

இனவழிப்பு மேற்கொண்ட சிறீலங்காவை நீதி தரவேண்டும் என கோருகின்றனர்.சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக இலங்கை அரசாங்கம் நல்லதொரு பதிலையும் நீதியையும் தரவேண்டுமென தொடச்சியாக வலிறுத்தி வருகின்றனர்.

கொலையாளிகளை நீதிபதிகளாக சித்தரிக்கின்றனர்

சிறீலங்காவின் காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தோடு பிரதான விருந்தாளிகளாக களமிறங்கியுள்ளனர்.

காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தோடு விருந்தாளிகளாக செயற்பட தொடங்கியதன் பின்னர் யாழிலும் மட்டகளப்பிலும் அலுவலகம் திறக்கப்பட்டு பல நூற்று கணக்கான காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சங்கத்தின் ஏற்பாட்டில் மறைமுகமாக மரணச்சான்றிதள் வழங்கப்பட்டு வருங்கின்றது. இது எந்த வகையில் நியாய படுத்தமுடியும்?

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போரட்டத்தினை கோட்டா அரசின் பக்கம் திசை திருப்பும் வகையில் சங்கத்தின் செயற்பாடு அமைந்துள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் உள்ளக பொறிமுறைக்குள் வலம் வருகின்றது.சிறீலங்கா அரசு நீதி தர வேண்டும் சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக இலங்கை அரசாங்கம் நீதியை தர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றி வருகின்றனர். மிருசுவில் படுகொலையில் சம்பந்தப்பட்டு நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியை விடுதலை செய்த சிறீலங்கா அரசு, தமது படையினரை காப்பாற்ற எதுவும் செய்ய தயாராக இருக்கின்ற சிறீலங்கா அரசு எப்படி உள்ளக பொறிமுறை மூலம் நீதியை பெற்று தரும்?

சிறீலங்காவின் சட்டத்துறை மீது அதிகம் நம்பிக்கை கொண்ட நபர் ஒருவர் ஜெனிவாக்குள் பல ஆண்டுகளுக்கு மேல் நித்திரை கொண்டு வருகிறார். அவரை சங்கத்தினர் ராஜதந்திரி என கூறுகின்றனர். குறித்த நபரே காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்குள் சங்கத்தை நுழைய விட்டு சிறீலங்காவின் சட்டத்துறையை நம்ப வைத்தவர்.

கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு ஆளாக்கப்பட்டிருந்தும் பாரிய வேதனைகளுக்கும், அழுத்தங்களுக்கும் ஆளான காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் குமுறல்களும் கண்ணீரும் என்றோ ஒருநாள் இவருக்கு பின்னால் நிற்பவர்களின் மனச்சாட்சியை தட்டிக்கேக்கும்.

ஏன் காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தோடு பேச வேண்டும் எதற்காக பேச வேண்டும்?
ஏன் அந்த அலுவலகத்துக்குள் வேலை வாய்ப்புக்கான விண்ணப்பம் பெற செல்லவேண்டும்?
அலுவலகத்துக்கு கால அவகாசம் கொடுத்து ஐந்து பேரை தேட கொடுத்ததின் நோக்கமென்ன?
யாழ்ப்பாணத்தில் அலுவலகம் ஏன் திறக்கப்பட்டது யாரின் அனுசரணையுடன் திறக்கப்பட்டது? எல்லாமே சங்கத்தின் ஏற்பாட்டில் திறக்கப்பட்டது.
மட்டகளப்பில் அலுவலகம் திறக்கப்பட்ட போது பிரதான விருந்தாளிகளாக வெளியில் நின்று சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக இலங்கை அரசு நீதி தரவேண்டும் என ஊடகங்களுக்கு கூறி சிறீலங்கா அரசை மனம் குளிரவைக்கவில்லையா?
சங்கத்தின் அத்தனை முயற்சிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகமானது ஏன் உள்ளக பொறிமுறையை நாடவேண்டும் உள்ளக பொறிமுறைக்குள் கொண்டரப்பட்ட காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகம் அல்லவா?

உறவுகளை காணாமல் ஆக்கியவர்களை நீதிபதிகளாக்கும் உங்கள் திட்டத்தின் பின்னணியில் யார் உள்ளார்கள் ? இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு காணாமலாக்கப்பட்ட சங்கத்தினரை தமது கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு ஜெனீவா வரை அவர்களை மாத்திரம் கொண்டு வந்து கண் துடைப்பு செய்து கொண்டிருக்கும் நபர்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு.

இந்த சங்கம் சிறீலங்கா உளவுத்துறையின் பின்புலத்தில் செயல்படுகிறது. பல ஆண்டுகளாக பெளதீக மற்றும் உளவியல் அழுத்தங்களை சுமந்துகொண்டு வாழ்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உறவுகளுக்கான நீதியை காண முடியவில்லை.

இப்போது இவர்களின் ஒவ்வொரு நகர்வும் ஒவ்வொரு அசைவையும் ஒட்டு மொத்த உறவுகளுக்கிடையில் பாரிய சந்தேகத்தை உருவாக்கி உறவுகளை தேடியவர்களை ஒதுங்க செய்தது.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணையை தடுத்து கொலையாளிகளை நீதிபதிகளாக மாற்றியவர்கள் சிறிதரன் உள்ளிட்ட கூட்டமைப்பினரின் நிகழ்ச்சி நிரலோ அல்லது சிறீலங்கா அரசாங்கத்தின் உளவுத்துறையின் நிகழ்ச்சி நிரலிலோ சங்கம் காணப்படுகின்றார்கள்

நாம் நிச்சயமாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு இந்த விசாரணையை கொண்டு செல்வோம் .தொடர்ச்சியாக சர்வதேசத்தை வலியுறுத்தி நீதியைப்பெறுவோம் உறவுகளை கண்டுபிடிப்போம் இவ்வாறான நிலைப்பாடு எமது அடுத்த சந்ததிக்கு வரவிடாமல் தடுப்போம்.தமிழர்களுக்கு ஒரு அனைத்துலக பாதுகாப்பை ஏற்படுத்துவோம்.

எனவே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்போடு இணையுங்கள்,
சங்கம் வளர்த்த தமிழினத்தில், சினிமா படங்களை கொட்டகையில் போட்டு இனத்தை சிதைத்தவர்கள் காணாமல் போனோரை கண்டுபிடிக்கும் சங்கத்தில் உங்களுக்கு சரியான திசையை தருவார்கள் என நம்பி இருந்தது போதும்.

இவர்களுக்கு பின்னால் வெளிநாடுகளில் சிறீலங்கா அரசாங்கத்தின் பின்னணியில் இருப்பவர்கள்.

இந்த சங்கத்தின் செயற்பாடுகள் மனித உரிமை செயற்பட்டாளர்கள் மத குருக்கள் மக்கள் மட்டத்தில் சங்கடத்தை ஏற்படுதியுள்ளது.

ஒவ்வொரு தமிழ் ஊடகவியலாளர்களும் இதனை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும். சரியான ஆய்வுகளை மேற்கொண்டு மக்கள் சரியான பாதையை தெரிந்தெடுக்க உதவ வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதிகோருதல்,இனவழிப்புக்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர் குற்றங்கள் ஈடுபட்டமைக்கு சிறீலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லவேண்டும் என்பதில் உண்மையான செய்திகளை பிரசுரியுங்கள். போலியானவர்களை அம்பலப்படுத்துங்கள் ஊடகத்துறையின் நடுநிலைப்போக்கை கடைப்பிடியுங்கள். உறவுளை மீட்டெடுப்போம் .எமது அடுத்த சந்ததிக்கு இந்த அவல நிலை வராமல் தடுப்போம். சந்ததியை காப்போம் வெல்வோம் இலக்கை நோக்கி கன குறிப்பிட்டார்