யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தரின் பின்னணி இதுவா? பரபரப்பை ஏற்படுத்திய கலாநிதி குருபரன்

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றைய தினம் இரவு இடிக்கப்பட்ட நினைவுத்தூபியை இடிப்பதற்கான தீர்மானத்தினை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகமே மேற்கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா இதனை தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் திரண்டனர்.

இதனால், பல்கலைக்கழக பிரதான வாயிலில் பரபரப்பு நிலை நேற்றைய தினம் இரவு எட்டு மணி தொடக்கம் ஏற்பட்டுள்ளது.

இன் நிலையில் யாழ் பல்கலைக்கழக சட்டபீடத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் தனது டுவிட்டர் தளத்தில் அது தொடர்பாக கருத்துவெளியிட்டுள்ளார்.

முன்னைய உபவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் பதவிநீக்கப்பட்டமைக்கு அவர் நினைவிடத்தை நிர்மூலமாக்காமையே காரணம்.

தற்போதைய ஜனாதிபதியால் புதிய உபவேந்தர் நியமிக்கப்பட்டமைக்கான முன் நிபந்தனைகளில் ஒன்றாக நினைவிடத்தை நிர்மூலமாக்கவேண்டும் என்ற விடயம் உள்ளது என்பதை நம்புவதற்கு என்னிடம் உறுதியான காரணங்கள் உள்ளன என டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

The previous VC was sacked because he didn’t demolish the monument. I have concrete reasons to believe that one of the pre-conditions for appointment of the new VC by the incumbent President was demolition of this monument.
https://t.co/RD2pb6ILkH

— K. Guruparan (@rkguruparan) January 8, 2021
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த பல்கலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவாக யாழ். பல்கலை வளாகத்தில் மாணவர்களால் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது.