அடுத்த சில தினங்களில் அமைச்சரவையில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த காலம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்ட நீதியமைச்சு மற்றும் துறைமுகம், கப்பல் துறை அமைச்சு உட்பட பல முக்கிய அமைச்சு பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அமைச்சரவை மாற்றத்திற்கான வரைவு ஒன்றை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச உருவாக்கி வருவதாக தெரியவருகிறது.
இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான டயனா கமகேவுக்கு ராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக பேசப்படுகிறது.
அமைச்சு பதவிகளில் நியமிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட துறைகளில் கடந்த சில மாதங்களாக ஒரு சிலர் மாத்திரமே திருப்தியடைய கூடிய பணிகளை செய்துள்ளதாகவும் இது தொடர்பாக ஜனாதிபதி கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.