வாசுதேவவின் செயலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று

நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் பிரியத் பந்துவிக்கிரமவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நீர்வழங்கல் அமைச்சராகப் பதவி வகித்துவரும் வாசுதேவ நாணயக்காரவுக்குக் கொரோனாத் தொற்று உறுதியாகியதை அடுத்து அவரது செயலாளரான பிரியத் பந்துவிக்கிரமவும் தனிமைப்படுத்தப்பட்டார்.