கொழும்பு மாநகர சபை கவுன்சிலர் உள்ளிட்டோருக்கு பிடியாணை

கொழும்பு மாநகர சபை கவுன்சிலர் கீகனகே குலதிஸ்ஸ உட்பட 10 பேரை கைதுசெய்ய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

2018 ஒக்டோபர் மாதம் தெமட்டகொடையிலுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான கட்டட வளாகத்தில் பதிவாகிய அமைதியின்மை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போது நீதிமன்றில் ஆஜராகத் தவறிய குற்றச்சாட்டுக்காகவே இவர்களுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பிடியாணை உத்தரவினை கொழும்பு தலைமை நீதவான் மொஹமட் மிஹால் பிறப்பித்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும ஏப்ரல் 3 ஆம் திகதி மீள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

தெமட்டகொடை பெற்றோலியக் கூட்டுத்தாபன அமையின்மையின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.