மியன்மார் அடுத்து சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை? சர்வதேசத்தின் அடுத்த பொறி

சர்வதேசத்தின் அடுத்த பொறி தொடர்பில் பிரித்தானியாவின் முன்னணி சட்டவாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அருண் கணநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அண்மையில் புலம்பெயர் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு இணையவழி கலந்துரையாடலில் கலந்து கொண்டு அவர் மேற்கொண்ட ஆய்வு உரையின் போது தான் அவர் இந்த விடயங்கள் பற்றித் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச நீதி தேடல் என்பது எங்களுக்கு மிக முக்கியமான விடயமாகக் காணப்படுகிறது.

அதற்கான பொறிமுறைகள் என்ன? அதற்கு என்ன என்ன வகையில் நீதி பொறிமுறைகள் இருக்கின்றன என்பது தொடர்பில் பல விடையங்கள் ஆராயவேண்டியுள்ளது.

இலங்கை சர்வதேச சட்ட மூலத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும், இலங்கை சர்வதேசத்தின் ஆணையை ஏற்றுக்கொள்ளலாம், இலங்கை போர்க்குற்ற சான்றுகளை பாரப்படுத்தலாம், புலம்பெயர் மக்கள் வாழுகின்ற சர்வதேச சட்டமூலத்தில் கைச்சாத்திட்ட நாடுகள் ஊடாக முயற்சிக்கலாம் என்றவரான நான்கு வழிகளில் சர்வதேச நீதிமன்றத்துக்கு வழக்குகள் போகலாம்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அதில் பல்வேறு கட்டமைப்புகள் உள்ளன. எங்களுக்கு நீதி தேடும் போது ஒவ்வொரு கட்டமைப்போடும் செயற்பட வேண்டும்.

ஒவ்வொரு கட்டமைப்பிலுமுள்ள பொறிமுறைகளை பயன்படுத்தி எங்களுடைய மக்களுக்கு நீதி கிடைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.