ராஜபக்ச குடும்பத்துக்குள்ளும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைத்துவத்துக்குள்ளும் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள அதிகாரப் போட்டி தற்போது உக்கிரமடைந்துள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடத்தப்படும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் அதன் நிறுவுநர் பஸில் ராஜபக்சவே வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனவும், இதற்கான செயற்பாடுகளை அவர் தற்போதே ஆரம்பித்துள்ளார் எனவும் ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது