வீதி விபத்து இடம்பெறுவதன் பின்னணியில் யார்? 24 மணித்தியாலத்தில் 15 பேர் பலி 40 பேர் காயம்

வீதி விபத்துகளினால் நேற்று மாத்திரம் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்போது 40 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்

நாடளாவிய ரீதியில் வீதி விபத்துகளில் சிக்கி நேற்று வியாழக்கிழமை மாத்திரம் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது 40 பேர் வரையிலும் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 11 பேர் நேற்று இடம்பெற்ற விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளதுடன் , எஞ்சிய நால்வரும் இதற்கு முன்னர் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளனர்.

இதன்போது பாதசாரதிகளே அதிகளவாக உயிரிழந்துள்ளதுடன் , அதற்கமைய 6 பாதசாரதிகள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் , மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 5 பேர் , முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் , சைக்கிள் மற்றும் வேனில் பயணித்த தலா ஒருவருமாக மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைகாலமாக வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விடையத்தில் பொலீசார் அக்கறை இல்லை

வேக கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பு சாரதிகளுக்கு உண்டு

பயணிகள் மற்றும் வாகன சாரதிகள் இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

வீதி விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்களை திரட்டுவதில் அக்கறையாக இருக்கும் பொலீசார் உயிர் இளப்பை தடுக்க அக்கறை செலுத்த வில்லை என்பதையே கூற முடியும்