யாழ் இளைஞர்களை சந்திக்கும் சாணக்கியன்- பொத்துவில் பொலிகண்டியின் பின் விளைவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் யாழ் மாவட்ட இளைஞர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுகின்றார்.

யாழ்ப்பாணம், நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

சமகால அரசியல் தொடர்பான இளைஞர்களின் எதிர்பார்ப்பு எனும் தொனிப்பொருளில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.