பௌத்த துறவிகள் போன்று வேடமிட்டு தாக்குதல் நடத்தப்படலாம்! ஞானசார தேரர் எச்சரிக்கை

இஸ்லாமிய அடிப்படைவாதம் நாட்டிலிருந்து முழுமையாக இல்லாதொழிக்கப்படவில்லை, அடிப்படைவாதிகள் தாக்குதல்களை பௌத்த துறவிகளை போல் வேடமிட்டும் முன்னெடுக்கலாம் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் எச்சரித்துள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர், ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து பல விடயங்களை குறிப்பிட்டோம்.

அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்காக முஸ்லிம் அரசியல் தலைவர்களும், ஆட்சியில் இருந்த அரச தலைவர்களும் இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.