தமிழ் மக்கள் மீண்டும் இறுக்கமாகும் கட்டுப்பாடுகள் – கோட்டாவின் தலைமையில் விசேட நடவடிக்கை

இலங்கையில் மீண்டும் கோவிட் வைரஸ் பரவுவது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடலில் கோவிட் தடுப்பு ஜனாதிபதி செயலணி ஈடுபடவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய மீண்டும் சுகாதார சட்டத்திட்டங்களை கடுமையாக்குவது தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மக்கள் ஒன்றுக்கூடும் செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்க கூடாதென பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார். இன்று இடம்பெறவுள்ள கூட்டத்தில் ஜனாதிபதியிடம் இது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது இளைஞர்களே கொரோனா தொற்றினால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆபத்தான நிலைக்குள்ளாகியுள்ள நோயாயர்களிலும் அதிகமானோர் இளைஞர்கள் என தெரியவந்துள்ளதாக வைத்தியர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தற்போதைய நிலைமைக்கமைய எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.