ஐ.நா குழுவினருக்கு நிஷாந்த டி சில்வா சாட்சியங்களை வழங்கியுள்ளதாக பூச்சாண்டி காட்டும்? சிங்கள பத்திரிகை

இலங்கையின் இராணுவ அதிகாரிகள் 28 பேருக்கு எதிராகப் போர்க் குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களைச் சேகரிக்கும் ஜெனிவா மனித உரிமை பேரவையின் விசேட விசாரணை குழுவினருக்குத் தகவல்களை வழங்கும் முதல் தர சாட்சியாளர் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா எனச் சிங்கள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

நிஷாந்த டி சில்வா முக்கியமான சாட்சியாளர் என மனித உரிமை பேரவையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த முன்னாள் அதிகாரியிடம் சில குற்ற வழக்குகள் தொடர்பான பீ அறிக்கை இருப்பதாகவும், அந்த இரகசியமான அறிக்கைகள் மனித உரிமை பேரவையிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஆமி சுரங்க என்ற முன்னாள் இராணுவ அதிகாரியின் கொலை சம்பந்தமாக பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நிஷாந்த டி சில்வாவை இலங்கைக்கு நாடு கடத்த சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் மறுத்துள்ளது.

அத்துடன் அவரது பாதுகாப்புக்காக அந்நாட்டு அரசாங்கம் இரண்டு பாதுகாவலர்களையும் வழங்கியுள்ளதாக அந்த சிங்கள பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.