ஒரே குழியில் புதைப்பது ஆற்றில் தூக்கி வீசுவது மகா மோசம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் கண்ணியம் முக்கியம்- இந்திய மத்திய, மாநில அரசுக்கு வேண்டுகோள்
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும், அவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்., ஆற்றில் வீசி எறிவது, அதை வலை விரித்துப் பிடிப்பது, ஒரே குழியில் புதைப்பது, எரிப்பது போன்ற கண்ணியக்குறைவான செயல்களைச் செய்யக்கூடாது, இதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
மருத்துவமனைக்கு பில் நிலுவைத் தொகை இருக்கிறது என்பதற்காக உடலை தர மறுத்தல் கூடாது எனப் பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசுக்கும், மாநில அரசுக ளுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழங்கியுள்ளது.
மேலும், தேசிய மனித உரிமை கள் ஆணையம் பிஹார், உ.பி. அரசு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. இந்நிலையில், உயிரிழந்தர்களை கண்ணியமாக அடக்கம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழங்கியுள்ளது. இந்தப் பரிந்துரைகளை அடுத்த 4 வாரங்களுக்குள் நிறைவேற்ற வும் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் கூறியிருப்பதாவது:
கொரோனாவால் உயிரிழந்த வர்களின் உரிமைகள், கண்ணி யம் காக்க மாநில அரசுகள், மத்திய அரசு புதிதாகச் சட்டம் இயற்ற வேண்டும்.
உயிரிழந்தவர்களை மொத்த மாக ஒரே குழியில் புதைப்பது, ஒரே இடத்தில் எரிப்பது போன்றவை உயிரிழந்தவர் களுக்கான உரிமையை மீறும் செயலாகும்.
மருத்துவமனையில் சிகிச்சையின் போது ஒருவர் உயிரிழந்துவிட்டால், பில் நிலுவைத் தொகைக்காக உயிரிழந்தவரின் உடலைத் தர மருத்துவமனை நிர்வாகம் மறுத்தல் தடை செய்யப்பட வேண்டும். யாருமற்ற ஆதரவற்றோர் உயிரிழந்தால் அவர்களின் உடல்களைக் குறிப்பிட்ட காலம் வரை பாதுகாக்க வேண்டும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல் களைக் கையாள்வது, அந்த உடல்களை அடக்கம் செய்வதில் பல்வேறு விதமான விதிமுறை மீறல்கள் நடக்கின்றன என்று செய்திகள் வருகின்றன. ஆதலால் உயிரிழந்தவர்களின் மதிப்பும், கண்ணியமும் காக்கும் வகையில், அவர்களை அடக்கம் செய்ய மத்திய அரசும், மாநில அரசுகளும் உரிய உத்தரவு களைப் பிறப்பிக்க வேண்டும்.
உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை மாவட்ட அளவில் டிஜிட்டல் புள்ளிவிவரத் தொகுப்பாக மாநில அரசுகள் பராமரிக்க வேண்டும். உயிரிழந்தவரின் ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
யாரேனும் ஒருவர் உயிரிழந்தால், அவரின் உடலை உடற்கூறு ஆய்வுக்குக் கொண்டு சென்றால் விரைவாக முடிக்கும் வகையில் போலீஸார் செயல்பட வேண்டும். உள்ளூர் நிர்வாகத்தினரும் உடலை விரைவாகக் கொண்டு செல்ல பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தாருக்கு உதவ வேண் டும்.
ஆதரவற்றோர் உடல்களைத் தொண்டு நிறுவனங்கள் முன்வந்து கண்ணியமான முறையில் அடக்கம் செய்ய உதவ வேண்டும். இல்லாவிட்டால் மாநில அரசு, மாவட்ட, உள்ளூர் நிர்வாகம் உரிய கண்ணியத் துடன் அந்த உடல்களை அடக்கம் செய்ய வேண்டும். உடல்களை அடக்கம் செய்பவர் களுக்கு உரிய பாதுகாப்பு ஆடை களை வழங்கிட வேண்டும்.
கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடல்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம், சர்வதேச நீதிமன்றம், உலக சுகாதார அமைப்பு, மத்திய அரசு ஆகியவை அறிவுறுத்திய போதிலும அவை கடைப்பிடிக்கப்படுவதில்லை. உயிரிழந்தவரின் உரிமைகளைக் காக்கத் தனியாகச் சட்டம் ஏதும் இந்த நாட்டில் இல்லை. அதற்காகப் புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்.”