கொரோனா அரசியல் பயணத் தடையை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் தீர்மானத்தில் அரசாங்கம்

பயணத் தடையை மேலும் சில நாட்களுக்கு நீடிப்பது என்ற தீர்மானமே தற்போதைக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயணத் தடையின் காரணமாக கோவிட் மரணங்களும், கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிந்தாலும், மரணங்கள் மற்றும் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் எண்ணிக்கையில் பாரிய மாற்றமொன்று ஏற்படவில்லை.

ஆகவே, பயணத் தடையை மேலும் சில நாட்களுக்கு நீடிப்பது என்ற தீர்மானமே தற்போதைக்கு இருக்கிறது.

தினமும் இது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. எனினும் விசேட வைத்திய நிபுணர்களின் தீர்மானங்களுக்கு அமையவே தீர்மானங்கள் எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.