உங்களிடம் நான் ஒன்றை கேட்க விரும்புகின்றேன்-சுரேன் ராகவனிடம் பகிரங்கமாக கேட்ட சிவாஜிலிங்கம்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் பற்றி விமர்ச்சிக்கும் முயற்சியில் சுரேன் ராகவன் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இல்லாவிட்டால் அவரைப் பற்றி நாங்களும் பல விடயங்களை வெளியே கூற வேண்டி ஏற்படும் என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் எச்சரித்தார்.

நேற்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

சுரேன் ராகவன் தான் வந்த வேலையை பார்க்காமல் எம்மை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும். தமிழ் கட்சிகளினுடைய தலைவர்கள் எல்லோரும் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். அவர்கள் தவறாக செயற்படுகிறார்கள் என தெரிவித்திருக்கிறார்.

நான் ஒன்றைகேட்க விரும்புகின்றேன், நீங்கள் வடக்கு மாகாண ஆளுநராக இருந்த போது மக்களே உங்களுடைய குறைபாட்டை தாருங்கள் நான் அதை ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கிறேன் என்று கூறினீர்கள்.

ஆனால் நான் உட்பட பலர் கொடுத்த குறைபாடுகளை குப்பை கூடையில் போட்டாரோ என தெரியவில்லை. இப்பொழுது அரசியல் கைதிகளை விவகாரத்தை பற்றி பரிசீலிப்பதற்கு 9 மாதங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றார் என்றார்.