கண்ணீரோடு கடக்கும் காதலர் தினம் : ஒரு போராளியின் காதல்

கண்ணீரோடு கடக்கும் காதலர் தினம் : ஒரு போராளியின் காதல்

இந்த உலகத்தில் நீதான் அழகி என்று நான் சொன்ன போது எல்லாம் ஈழத்தை விடவா நான் அழகு என்று அவள் என்னிடம் கேட்ப்பாள்.

அவளை சந்திக்க வேண்டும் நிறைய பேச வேண்டும் என எதிர்பார்த்து காத்திருப்பேன் – அவளோ
ஊரின் எல்லையில் துப்பாக்கியோடு கண்விழித்து காவல் இருப்பாள்.

நல்ல நாள் திருநாளில் அவளுக்கு ஒரு புது புடவை வாங்கி பரிசளிக்க முயற்சித்தால் – அம்மா அப்பாவை இழந்து பசியோடு வாடும் குழந்தைகளை பற்றியே அவள் என்னோடு பேசிக் கொண்டிருப்பாள்.

சிறு மஞ்சல் கயிற்றையாவது கட்டி அவளை
மனைவியாக்கி விட வேண்டும் என்ற கற்ப்பனையில் நான் இருந்தேன் – அவளோ கழுத்தில் நஞ்சை கட்டிக் கொண்டு நமக்கு ஒரு தேசம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்தாள்.

அவளும் நானும் சேர்ந்து வாழ்ந்தால் எப்படியிருக்குமென மனக்கோட்டை கட்டி வாழ்தேன். மண் மூட்டைகளை அடுக்கி மக்களுக்காக – அவள் பதுங்கு குழி தோண்டிக் கொண்டிருந்தாள்.

பூக்களில் இருந்து அவளது முகத்தையும் காற்றின் ஒலிகளில் இருந்து அவளது குரலையும் பிரித்து எடுத்து கொண்டிருந்தேன் – குண்டு மழையிலும்
இரத்த வெள்ளத்திலும் அவள் நெஞ்சை நிமிர்தி
போராடிக் கொண்டிருந்தாள்.

என்னுடைய காதல் அவள் மீது இருந்தது.
அவளுடைய காதல் மண் மேலே இருந்தது.

எப்படியாவது அவள் என் வீட்டிற்கு விளக்கேற்ற
வருவாள் என்றே நம்பியிருந்தேன் – ஆனால்
அவள் வித்துடலை புதைத்த மண் மேலே
நான் நினைத்தீபம் ஏற்றுவதற்கு …

அவள் கல்லறையை கூட விட்டு வைக்கவில்லை..