ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்குவது தொடர்பில் ரணில் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இடையூறு விளைவிக்கவோ அல்லது கட்டிடங்களை மீண்டும் ஆக்கிரமிக்கவோ எந்த வகையிலும் போராட்டக்காரர்களுக்கு இடமளிக்கப் போவதில்லை என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

CNN செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்க வேண்டும். தற்போது இடம்பெற்று வரும் போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமை தொடர்பில் பதில் ஜனாதிபதி கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது நாடாளுமன்ற விவகாரங்களை நடத்துவதற்கோ இடையூறாக இருக்காதீர்கள்.

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு இடையூறு ஏற்படுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

எப்பொழுதும் துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டாம் என பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். எனினும், சில சந்தர்ப்பங்களில் எதிர்ப்பாளர்கள் பாதுகாப்புப் படையினரைத் தாக்கியிருந்தாலும், முடிந்தவரை துப்பாக்கிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று நாங்கள் அவர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளோம்” என பதில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.