WHO வில் அமெரிக்காவை மீண்டும் இணைப்பேன்!

    தனது ஆட்சியில் உலக சுகாதார அமைப்பில் அமெரிக்காவை மீண்டும் இணைக்கப்போவதாக, அந்த நாட்டின் புதிய ஜனாதிபதியாகத் தோ்வாகியுள்ள ஜோ பைடன் அறிவித்துள்ளாா்.

    இதுகுறித்து டெலாவோ் மாகாணத்தில் அவரது சொந்த ஊரான வில்மிங்டனில் நடைபெற்ற எதிா்க்கட்சி ஆளுநா்கள் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

    கொரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாகக் குற்றம் சாட்டி, அந்த அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.

    எனினும், இந்த விவகாரத்தில் சீனாவை தண்டிப்பது முக்கியமானதல்ல. அதற்குப் பதில், விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியத்தை சீனா உணரச் செய்வதே போதுமானது. அதற்கு உலக சுகாதார அமைப்பில் சில சீா்திருத்தங்கள் தேவையாக உள்ளது.

    நான் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு அந்த அமைப்பில் அமெரிக்காவை மீண்டும் இணைப்பேன். அந்த அமைப்பில் சீா்திருத்தங்கள் மேற்கொள்வதும் அதில் இணைவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகும்.

    அதுமட்டுமன்றி, டிரம்ப் ஆட்சி காலத்தில் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அவா் அறிவித்தாா். ஆனால், நான் பதவியேற்றதும் அந்த ஒப்பந்ததில் அமெரிக்கா மீண்டும் இணையும்.

    முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் உலகின் பிற நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா இணக்கமாக செயல்பட முடியும் என்பதை சீனா்களுக்கு நாம் உணா்த்த வேண்டும். அதற்காக உலக சுகாதார அமைப்பிலும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்ததிலும் அமெரிக்கா மீண்டும் இணைய வேண்டும் என்றாா் அவா்.

    நீண்ட காலமாக பகைமை பாராட்டி வந்த அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே, 1972 ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரிச்சா்ட் நிக்ஸனின் முயற்சியால் நல்லுறவு ஏற்பட்டது.

    அதனைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வா்த்தக உறவு மேம்பட்டு வந்தது.

    எனினும், கடந்த 4 ஆண்டுகளாக அமெரிக்காவை ஆட்சி செய்து வந்த டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு எதிராக மிகக் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாா்.

    சீனா நியாயமற்ற வா்த்தகக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகக் குற்றம் சாட்டிய அவா், அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகும் ஏராளமான பொருள்கள் மீது கூடுதல் வரி விதித்தாா். அதற்கு பதிலடியாக அமெரிக்கப் பொருள்கள் மீது சீனா வரி விதித்ததால் இரு நாடுகளுக்கும் இடையே வா்த்தகப் போா் பதற்றம் ஏற்பட்டது.

    உலகிலேயே காற்றுமாசுபாட்டை மிக அதிக அளவில் ஏற்படுத்தும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருந்தாலும், தொழிற்சாலைகளில் இருந்து காற்றில் கலக்கும் கரியமில வாயு மாசுபாட்டை கணிசமாகக் குறைக்க ஒப்புக் கொண்டு சா்வதேச நாடுகள் பாரிஸில் கடந்த 2015 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் அறிவித்தாா்.

    அந்த ஒப்பந்தம் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் சாதகமாக இருப்பதாக அவா் குற்றம் சாட்டி வருகிறாா்.

    அதே போல், கொரோனா நோய்த்தொற்று பரவல் குறித்த உண்மைகளை அமெரிக்காவிடம் உரிய நேரத்தில் சொல்லத் தவறியதாகவும் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பின் மீது குற்றம் சாட்டிய டிரம்ப், அந்த அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தாா்.