22 ஆவது திருத்தம் பிரிவினைவாத அரசியலமைப்பு சதித்திட்டம் – குணதாச அமரசேகர சபாநாயகருக்கு கடிதம்

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூல நடவடிக்கை ஊடாக பாராளுமன்றத்துக்குள் பிரிவினைவாத அரசியலமைப்பு சதித்திட்டம் இடம்பெறும் அபாயம் இருக்கின்றது.

அதனால் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த சட்டமூலம் தொடர்பில் பொது மக்களுக்கு அறிவுறுத்த இடமளிக்கப்படவேண்டும் என தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் அவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போது பராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்வாங்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 22ஆவது திருத்த நடவடிக்கை ஊடாக பாராளுமன்றத்துக்குள் பிரிவினைவாத அரசியலமைப்பு சதித்திட்டம் இடம்பெறும் அபாயம் இருக்கின்றது.

பொது மக்களின் இறையாண்மைக்கு அழுத்தங்களை ஏற்படுத்த முடியுமான, நாட்டின் உயர்ந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது ஏனைய சட்ட மூலங்களை அனுமதித்துக்கொள்வதை விட பாரிய விடயமாகும்.

பாராளுமன்றத்தில் அவ்வாறான சட்ட திருத்தம் மேற்கொள்ளும் செயற்குழு நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரின் பரிதாபத்துக்கு கீழ் படியவைக்க முடியாது.

அதனால் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்படவேண்டும் என்பதை அரசியல் கொள்கையாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அத்துடன் குறித்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் அனுமதித்துக்கொள்ளவதற்கு முன்னர் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக பொது மக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கலந்துரையாடல்களுக்கு இடமளி்ப்பதற்காக இரண்டு வார காலம் ஒதுக்கப்படவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.