உளவுக் கப்பல் தொடர்பில் கொதிக்கும் இந்தியா-சீனா கொடுத்த பதிலடி

சீனக்கப்பலின் இலங்கைக்கான பயணம் தொடர்பில் இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகள் குறித்து அந்த நாட்டிடமே விளக்கம் கேட்க வேண்டும் என இலங்கைக்கான சீன தூதுவர் கி சென் ஹாங் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இன்று காலை சென்றடைந்த யுவான் வாங் 5 கப்பலின் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட சீன தூதுவரிடம் ஊடகவியளாலர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இவ்வாறு கூறியுள்ளார்.

சீனாவின் யுவான் வாங் 5 (Yuan Wang 5) கண்காணிப்புக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இலங்கை கடற்பரப்பு பிராந்தியத்திற்குள் நேற்று (15) பிற்பகல் உள்நுழைந்திருந்த நிலையில் இன்று காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வருகைதந்துள்ளது.