இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சுங் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு உருவாக்கம் -சீனா மீது சந்தேகம்

 

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சுங் தனது பெயரில் போலி டுவிட்டர் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

தமது டுவிட்டர் கணக்கினை பிரதிபலிக்கும் வகையில் இந்த கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

தமது டுவிட்டர் கணக்கிலிருந்து இடப்படும் பதிவுகள் போன்று போலித் தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

உறுதிப்படுத்தப்பட்ட தமது டுவிட்டர் கணக்கின் தகவல்களை மட்டும் பார்க்குமாறு அமெரிக்கத் தூதுவர் அனைவரிடமும் கோரியுள்ளார்.

அமெரிக்கத் தூதுவர் கூறினார் என வெளியிடப்படும் டுவிட்களை நம்ப வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.