300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வர்த்தமானியில் திருத்தம்! வெளியானது அறிவிப்பு

இலங்கையில் 300இற்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிக தடை விதித்து வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

300 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதி வெளியிடப்பட்டது.

புதிய வர்த்தமானி

 

இதற்கமைய, 2022 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலை திருத்தியமைத்து புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வாசனை திரவியங்கள் உள்ளிட்ட சில பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.