ஆஸ்திரேலியாவின் ஏதிலிகளுக்கு அனைவருக்கும் நிரந்தர விசா வழங்கப்படவேண்டும்! மாற்றத்தை ஏற்படுத்த மாபெரும் பேரணி

அவுஸ்திரேலியாவின் புதிய அரசிடம் , ஏதிலிகள் அனைவருக்கும் நிரந்தர விசா வழங்கப்படவேண்டும் எனும் கோரிக்கையை முன் வைத்து Refugee Action Coalition (ROC ) அமைப்பினால் பேரணி முன்னெடுக்க படவுள்ளது .

இப் பேரணி எதிர்வரும் செப்டெம்பர் 18 ஞாயிறு மதியம் 2 மணிக்கு Sydney Town Hall இல் நடைபெற உள்ளது.
Australia Tamil Refugee Council அமைப்பும் இப் பேரணியில் கலந்து தமது ஆதரவை வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது .

பிரயாண ஒழுங்குகள்

மதியம் 12 மணிக்கு பெண்டில் கில்லியிலிருந்தும் , 12.30 மணிக்கு ஹோம்புஷில் இருந்தும் புறப்படுவதற்கு ஏற்றவாறு போக்குவரத்துக்கு வசதிகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்துக்கு வசதிகளை பயன்படுத்த விரும்புவோர் பதிவு செய்யுமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
தொடர்புகளுக்கு
கல்யாணி
0425 306 933