அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், ஜனவரி 20 ஆம் திகதி ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ளார்.
இந்நிலையில், பைடன் சனிக்கிழமை தனது வீட்டில் செல்லப்பிராணியான நாயுடன் விளையாடியபோது அவருக்கு கணுக்காலில் உபாதை ஏற்பட்டது.
இதனால் நடக்க முடியாமல் சிரமப்பட்டார். இதனையடுத்து டெலாவரில் உள்ள எலும்பியல் சிகிச்சை மையத்திற்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
வைத்தியசாலையில் இருந்து அவர் வெளியே வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம், அவரது பாதுகாப்பு வாகனங்களின் அணிவகுப்பு தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.
பைடனுக்கு வலது காலில் சுளுக்கு ஏற்பட்டிருப்பதை அவரது மருத்துவர் கெவின் ஓ கென்னார் உறுதி செய்துள்ளதுடன் அவருக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும், அதேசமயம் பல வாரங்களுக்கு நடைபயிற்சிக்கான பூட்ஸ் அணியவேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் பைடன் விரைவில் குணமடைய வேண்டும் என ஜனாதிபதி ட்ரம்ப் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.