கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராகவும் விசாரணைகளை முன்னெடுக்க உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெசனல் உட்பட்ட தரப்புக்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களின் மீதே இந்த அனுமதி இன்று வழங்கப்பட்டுள்ளது.