22 ஆவது திருத்தம் தொடர்பில் வெளிநாட்டு தூவர்களுக்கு அமைச்சர் விஜேதாச விளக்கமளிப்பு

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கும் 22ஆம் திருத்தம் தொடர்பில் இலங்கைக்கான இந்துனேசியாவின் உயர் ஸ்தானிகர் மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவர் ஆகியோருடன் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் கலந்துரையாடி உள்ளார்.

இலங்கைக்கான இந்துனேசிய உயர் ஸ்தானிகர் தேவி குஸ்டினா டொபிங் மற்றும்  சுவிட்சர்லாந்து தூதுவர் டொமின்க் பர்ங்ளலர் ஆகியோர் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ்வை இன்று (11) நீதி அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்தை அனுமதித்துக்கொள்வதன் அவசியம், இலங்கை தற்போது எதிர்கொண்டுவரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது மற்றும் இலங்கை இந்துனேசியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுடன் நீண்டகாலமாக கடைப்பிடித்துவரும்  தொடர்புகளை மேலும் முன்னேற்றகமான நிலைக்கு கொண்டுசெல்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் 22ஆம் திருத்தம் எதிர்வரும் 20,21ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொண்டு, அனுமதித்துக்கொள்ள இருப்பதாகவும் இலங்கைக்குள் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் வெற்றிகமாக மேற்கொள்வதற்காக அரசியலமைப்பு மறுசீரமைப்பின் தேவை குறித்தும்  அமைச்சர் இதன்போது அவர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த நாட்டின் நன்மைக்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கைக்காகவும் எமது நாட்டின் உதவி தேவைப்படும் எந்த சந்தர்ப்பத்திலும் அதனை பெற்றுத்தர தயாராக இருக்கின்றோம். அத்துடன் பொருளாதாரம் அரசியல் மற்றும் கலாசார ரீதியில் இரண்டு நாடுகளுக்கிடையில் இருந்து வரும் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்திக்கொள்வதற்காக நடவடிக்கை எடுப்பதாக இந்துனேசிய உயர் ஸ்தானிகர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கத்தினால் முடியுமான உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் இதன்போது தெரிவித்துள்ளார்.