குரோம் உலாவியில் அதிரடி மாற்றம்

அன்ரோயிட் சாதனங்களில் அதிகளவாக கூகுள் குரோம் உலாவியே பயன்படுத்தப்பட்டு வருகின்றது . இவ் உலாவியில் incognito mode எனும் வசதியும் காணப்படுகின்றது .

இதன் மூலம் கடவுச் சொல் சேமிக்கப்படாத முறையிலும் குக்கீஸ் சேமிக்கப்படாத வகையிலும் குரோம் உலாவியை பயன்படுத்த முடியும் .

இதேவேளை பாதுகாப்பு நோக்கத்திற்காக incognito mode வசதியில் இருக்கும் போது ஸ்கிரின் ஷாட் எடுக்க முடியாத நிலை இதுவரை காணாப்பட்டது . எனினும் இதில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

இதன்படி புதிய கூகுள் குரோம் பதிப்பில் incognito mode வசதியில் ஸ்கிரின் ஷாட் எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவ்வசதி குரோம் உலாவியில் உள்ளதாத என பரிசீலிக்க முடியும் . இதற்கு chorme canary உலாவியில்
இனைய முகவரி உட்புகுத்தும் பகுதியில் chorme//flags என்பதை தட்டச்சு செய்து Enter செய்யவும் .

இப்போது incognito screenshot என search செய்யவும் . இதற்கான பெறுபேறுகள் காண்பிக்கப்பட்டின் அதனை Enable செய்யவும் .