கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் முடிவை கண்டுகொள்ளாத 3 எம்.பிக்கள்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் முடிவுக்கு முரணாக மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.

 

இந்த சந்திப்பின் போது, கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று கடந்த புதன்கிழமை நடைபெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

எனினும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.