கொழும்பில் நபர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை-பட்டப்பகலில் நடந்த கொடூர சம்பவம்

கொழும்பு – மட்டக்குளிப் பிரதேசத்தில் நபர் ஒருவர் இன்று (28.11.2022) கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளிப் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காரில் வந்த இருவர், இந்தப் படுகொலையை மேற்கொண்டனர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்த நபர் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.