புகலிடக்கோரிக்கையாளர்களை வெளியேற்ற வெள்ளை பட்டியல்-பிரித்தானியா அதிரடி நடவடிக்கை

பாதுகாப்பான நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்குள் நுழைந்துள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை வெளியேற்ற ரிஷி சுனக் அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் காரணமாக பாதுகாப்பான நாடுகளின் ’வெள்ளைப் பட்டியல்’ ஒன்றை உருவாக்க பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

புகலிடக்கோரிக்கையாளர்களை வெளியேற்ற வெள்ளை பட்டியல்: பிரித்தானியா அதிரடி நடவடிக்கை | White List To Expel Asylum Seekers Uk

நாட்டில் போர், பஞ்சம், அரசியல் பிரச்சினைகள் போன்ற காரணங்களின்றி அமைதியான நாட்டிலிருந்து படகு மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளவர்களே இவ்வாறு வெள்ளை பட்டியலில் சேர்க்கப்படவுள்ளனர்.

புகலிடக்கோரிக்கையாளர்களை வெளியேற்ற வெள்ளை பட்டியல்: பிரித்தானியா அதிரடி நடவடிக்கை | White List To Expel Asylum Seekers Uk

இவ்வாறு பாதுகாப்பான நாட்டிலிருந்து வந்தவர்களை மீண்டும் அவர்களுடைய சொந்த நாட்டிற்கே அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டவர்கள் தங்கள் தரப்பு வாதத்தை நிரூபிக்க முடியாத பட்சத்தில், அதை எதிர்த்து மேல் முறையீடும் செய்ய முடியாத வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.