நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் குறைப்பு

நாளை (டிசம்பர் 01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.

 

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நெத்தலியின் விலை ரூ. 150 ரூபாவாகவும், சிவப்பு அரிசி 6 ரூபாவாகவும், கீரி சம்பா 15 ரூபாவாகவும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாவாகவும் குறைக்கப்படுகின்றன.

நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் குறைப்பு | Reduction In Prices Of Essential Food Items

 

மாற்றப்பட்ட விலைகள் பின்வருமாறு

01. சிவப்பு அரிசி – ரூ. 199

02. கீரி சம்பா – ரூ. 225

03. பெரிய வெங்காயம் – ரூ. 225

04. நெத்தலி  – ரூ. 1150