தமிழர் பகுதியில் டொலர்களாக அள்ளும் இந்திய நிறுவனம்

மன்னார் பூநகரியை சுற்றியுள்ள கடற்பகுதியில் காற்றாலைகளை பயன்படுத்தி 30,000 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என இந்திய மின்சார அமைச்சு அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த காற்றாலை மின்சாரம் நமது நாட்டிற்கு அன்னியச் செலாவணியை ஈட்டித் தரக்கூடிய பெரும் செல்வம் என ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் பகுதியில் இருந்து 30,000 மெகாவோட்டும், எல்லையில் உள்ள இந்திய கடல் பகுதியில் இருந்து மேலும் 30,000 மெகாவோட்டும் உற்பத்தி செய்ய முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழர் பகுதியில் கொட்டிக் கிடக்கும் பெரும் செல்வம் - டொலர்களாக அள்ளும் இந்திய நிறுவனம் | An Indian Company That Sells In Dollars

இந்தியப் பகுதியில் காற்றாலை மின் நிலையங்கள் அமைப்பதற்கான அடிப்படைப் பணிகளை அந்நாடு ஏற்கெனவே தயாரித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் முன்னணி எரிசக்தி உற்பத்தியாளர்களில் ஒருவரான அதானி, தாங்கள் தொடங்கவிருக்கும் காற்றாலை மின் திட்டம் தொடர்பாக பல முன்னணி நிறுவனங்களால் இந்த பிராந்தியத்தில் ஆராய்ச்சியும் நடத்தியது.

யாழ்ப்பாணத்தின் பூநகரி பகுதியில் 500 மெகாவோட் காற்றாலை மின் திட்டத்தை அதானி நிறுவனம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளது. ஒரு மெகாவோட் மின்சாரம் தயாரிக்க அவர்கள் முதலீடு செய்யும் தொகை ஒரு மில்லியன் டொலர்கள் என்று இந்திய அறிக்கைகள் காட்டுகின்றன.

தமிழர் பகுதியில் கொட்டிக் கிடக்கும் பெரும் செல்வம் - டொலர்களாக அள்ளும் இந்திய நிறுவனம் | An Indian Company That Sells In Dollars

தற்போது இலங்கையின் நாளாந்த மின்சார உற்பத்தி திறன் சுமார் 4300 மெகாவோட்களாகும். இப்பகுதியில் உள்ள ஆழம் குறைந்த கடலில் கட்டப்படும் காற்றாலை மின் நிலையங்களில் இருந்து ஏழு மடங்கு அதிக ஆற்றலை உற்பத்தி செய்து, அதிகப்படியான உற்பத்தியை சர்வதேச அளவில் விற்பனை செய்து பெரும் டொலர் வருமானம் பெற முடியும் என ஆய்வு அறிக்கை கூறுகிறது.

இந்தியாவைத் தவிர, ஜப்பானும் இந்த அறிக்கையை ஆய்வு செய்து எதிர்காலத்தில் தகுந்த முதலீட்டு திட்டங்களை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.