பிரித்தானியாவில் தொடரும் கடும் பொருளாதார நெருக்கடி! ரிஷி சுனக்கின் அதிரடி அறிவிப்பு

வேலைநிறுத்தம் இடையூறுகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க “புதிய கடுமையான சட்டங்களை” உருவாக்கி வருவதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

“தொழிற்சங்கத் தலைவர்கள் தொடர்ந்து நியாயமற்றவர்களாக இருந்தால், பிரித்தானிய பொதுமக்களின் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது தனது கடமை” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் தொழிற்கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர், தற்போதைய தொழில்துறை நடவடிக்கைக்கு புதிய சட்டங்கள் உதவாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சி கோவிட் தொற்றின் பின்னர் மந்தமடைந்துள்ளது.

கடந்த 11 வருடங்களில் இல்லாத மிகப்பெரும் பொருளியல் பின்னடைவை, பிரித்தானியா தற்போது சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இக்காலப்பகுதிகளில் வேலைநிறுத்தம் செய்ய உள்ளவர்களில் செவிலியர்கள், துணை மருத்துவ பணியாளர்கள் மற்றும் புகையிரத ஊழியர்கள் என பலர் உள்ளனர்.

அதிகரித்து வரும் வாழக்கைச் செலவும் மற்றும் ஊதிய உயர்வை வலியுறுத்தி பிரித்தானியா முழுவதும் உள்ளி முக்கிய நகரங்களில் பொதுமக்களினால் தொடர்ச்சியாக பெரும் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் நாட்களிலும் அவ்வாறான பல போராட்டங்களுக்கு அறிவிப்புக்களும் வெளியிடப்பட்டு வருகின்றது.

பிரித்தானிய அரசாங்கம், தன்னுடைய தொழில் நிறுவனங்களுக்கு, தொழிலார்களை வேலை நீக்கம் செய்வதை பார்க்கிலும், அவர்களை வேலையில் வைத்திருப்பதற்கு அதிகளவிலான நிவாரணப் பொதிகளை வழங்குகின்றபோதும் இந்த நிலையில் மாற்றம் பெரிதாக இல்லாமை பிரச்சினையாக மாறியிருக்கிறது.

உதாரணமாக,கோவிட் வைரஸ் காரணமாக, தொழிற்றுறைக்கு 100% பங்களிப்பை வழங்க முடியாத தொழிலாளர்களுக்கு, 60% – 80% ஊதியம் வழங்க அரசாங்கம் நிவாரணம் வழங்குகின்றது. வரி ரீதியான சலுகை வழங்குகிறது. தொழிலைக் கொண்டு நடத்த, வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. இத்தனை இருந்தும், பொருளாதாரச் சரிவை ஈடுசெய்வதில் தடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதன் காரணமாக, பிரித்தானியாவும் அதன் பிரஜைகளும் பாரிய வரப்பிரசாதங்களை இழந்து இருக்கிறார்கள். இதனால், பிரித்தானிய அரசாங்கம் அறிவித்து வருகின்ற நிவாரணப் பொதிகளை, அதனுடைய நிதியிலிருந்து வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறதே தவிர, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வழமையாகக் கிடைக்கும் நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுவும் பொருளாதாரச் சரிவுக்குக் காரணமாகச் சொல்லுகிறார்கள்.

இவ்வாறான கடும் பொருளாதார நெருக்கடி நிலையில் பிரித்தானிய உள்ள நிலையில் மக்கள் அதிகரித்து வரும் வாழக்கைச் செலவும் மற்றும் ஊதிய உயர்வை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.