சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழு யாழ் கோட்டைக்கு விஜயம்

யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் விஜயம் செய்து பார்வையிட்டனர்.

இன்றைய தினம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹு வெய், சீனத்துதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட மூவர் குழுவினரே குறித்த விஜயத்தில் ஈடுபட்டனர்.

குறித்த விஜயம் சுற்றுலா ரீதியானது என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் கோட்டை பொறுப்பான அலுவலர்களோ உத்தியோகஸ்தர்களோ பிரசன்னமாகி இருக்கவில்லை.

இதன்போது கோட்டை தொடர்பான விடயங்களை அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்து கொண்டனர்.

இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பொலிசார் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.