புதிய ஆண்டுக்கான இலக்குகள் குறித்து பிரதமர் கருத்து

வெற்றிகரமான எதிர்காலத்தின் வாரிசுகளாக அனைவரும் ஒரே நாட்டில் பங்காளிகளாக செயற்பட வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் புத்தாண்டுக்கான கடமைகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வரலாறு நெடுக பின்னடைவுகளையும் மீள் எழுச்சியையும் அனுபவித்த ஒரு நாடாக எமது நாட்டை மீண்டும் ஒரு பெருமை மிக்க நாடாக மாற்றியமைக்க முடியும் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

புதிய வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் பிரதமரின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.