208 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

208 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகமை தொடர்பான விபரங்களை இப்போது ஒன்லைனில் பொதுமக்கள் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 208 பேர் தங்களது கல்வி மற்றும் தொழில் தகமைகளை நாடாளுமன்ற செயலகத்தில் அறிவித்துள்ளனர்.

தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உத்தரவு
எவ்வாறாயினும், 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தகவல்களை நாடாளுமன்ற செயலகத்திடம் ஒப்படைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமை ஆணையம் (ஆர்டிஐசி) பிறப்பித்த உத்தரவின்படி இந்த விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களை www.parliament.lk என்ற நாடாளுமன்ற இணையத்தளத்தில் உள்நுழைந்து, அந்த தளத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடைவு வகையை அணுகுவதன் மூலம் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.