ஒரு சில நிமிடங்களிற்குள் கலைந்த விமானியாகும் கனவு – ஒரு பெண் விமானியின் துயரக்கதை

16 வருடங்களிற்கு முன்னர் யெட்டி எயர்லைன்சின் விமானவிபத்தில் தனது முதல் கணவரை பறிகொடுத்த இணை விமானி அஞ்சு கத்திவாடா நேற்று நேபாளத்தில் இடம்பெற்றவிமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கட்டிவாடாவின் முன்னாள் கணவர் தீபக் பொஹரேல் 16 வருடங்களிற்கு முன்னர் ( 2006 ஜூன் 21ம் திகதி) ஜூம்லாவில் இடம்பெற்ற யெட்டி எயர்லைன்ஸ் விபத்தில் உயிரிழந்தார்.

அவரது மரணத்தின் பின்னர் அஞ்சு விமானியாக பணியாற்ற ஆரம்பித்தார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது கணவரின் மரணத்தின் பின்னர் கிடைத்த காப்புறுதி பணத்தின் மூலம் அவர் விமானியாவதற்கான பயிற்சிகளை பெற்றார் என யெட்டி எயர்லைன்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அஞ்சு விமானியாவதற்கு சில நிமிடங்களே இருந்தன விபத்திற்குள்ளான விமானம் ஆபத்தின்றி தரையிறங்கியிருந்தால் விமானியாகும் அவரது கனவு நினைவாகியிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விமானமே அவர் இணை விமானியாக பணியாற்றும் இறுதி விமானம் என்ற நிலை காணப்பட்டது

அஞ்சு 6400மணித்தியாலங்களிற்கு மேல் விமானத்தை செலுத்தியுள்ளார் இதேவேளை விபத்திற்குள்ளான விமானத்தின் விமானி கமால் கே.சியின் உடல் அடையாளம்காணப்பட்டுள்ளது எனினும் அஞ்சு கத்திவாடாவின் உடல் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை