வருமான வரி தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் முதலில் எடுத்த தீர்மானம்! பந்துல வெளியிட்ட தகவல்

வரி வருவாயை நம்புவதை விட, வரி அல்லாத வருவாயை அதிகரிப்பது முக்கியம் எனவும் அப்போது மக்கள் மீது சுமையை ஏற்ற வேண்டிய அவசியமில்லை” என பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (31.01.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது,

“மாதாந்த வருமானம் 45,000 ரூபாவுக்கு மேல் உள்ள அனைவருக்கும் வரி அறவிடுவதற்கு சர்வதேச நாணய நிதியம் முதலில் தீர்மானித்தது.

இதனையடுத்து, INF உடன் இடம்பெற்ற அரசாங்கம் மேற்கொண்ட கலந்துரையாடலில் இந்த வரம்பை அரசாங்கம் ஒரு இலட்சமாக உயர்த்த கோரிக்கை முன்வைத்தது.

அதன்படி மாதாந்த வருமானம் 100,000 ரூபாவுக்கு மேல் வருமானம் பெருபவர்களுக்கே வரி அறவிடப்பட வேண்டும் என அரசாங்கம் கேட்டுக்கொண்டது.

மேலும், எதிர்கால கடனைகளை அடைப்பதற்கு வருமான ஆதாரங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அரசு நிறுவனங்களும், சட்டப்பூர்வ அமைப்புகளும் இலாபம் ஈட்டினால், மக்கள் மீது இவ்வளவு வரிச் சுமையை நாம் சுமத்தத் தேவையில்லை.

இலாபம் இருந்தால் அது அரச வருவாயில் சேர்க்கப்படும். இதுபற்றி அரசியல் சாராத அறிவொளிப் பேச்சு நடத்துவது நல்லது எனவும் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.