ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் உக்ரேன் ஜனாதிபதி பங்குபற்றுவார்

ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸேலேன்ஸ்கி, கௌரவ விருந்தினராக இன்று பங்குபற்றவுள்ளார்.

இம்மாநாட்டில் போர் விமானங்களை விரைவாக வழங்குமாறு ஜனாதிபதி ஸேலேன்ஸ்கி கோரிக்கை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டன், மற்றும் பிரான்ஸுக்கு நேற்று திடீர் விஜயம் மேற்கொண்ட ஸேலென்ஸ்கி, பெல்ஜிய தலைநகர் பிரசல்ஸில் இன்று நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிலும் கௌரவ விருந்தினராக பங்குபற்றவுள்ளார்.

பாரிஸ் நகரில் நேற்று அவர் பேசுகையில், எவ்வளவு விரைவாக உக்ரேன் நீண்ட தூர வீச்சுடைய கனரக ஆயுதங்களைப் பெறுகிறதோ, எவ்வளவு விரைவாக எமது விமானிகள் விமானங்களைப் பெறுகின்றனரோ அவ்வளவு விரைவாக ரஷ்ய ஆக்கிரமிப்பு முடிவடையும், ஐரோப்பாவில் அமைதி நிலவும் என அவர் கூறினார்.