சம்பந்தருக்கு ‘பிரஷர்’ ஏற்றிய திருகோணமலை முக்கியஸ்த

இது திருகோணமலை தமிழரசுக் கட்சியில் நடந்த ஒரு கூத்து.

உள்ளூராட்சி சபை வேட்பாளர் தெரிவின்போது சம்மந்தர் தனது ஆதரவாளர்கள் சிலரை வேட்பாளராக நியமிக்குமாறு திருகோணமலை முக்கியஸ்தர் ஒருவருக்கு தொலைபேசி ஊடாக கட்டளை பிறப்பித்திருந்தாராம்.

சம்பந்தருக்கு தலையாட்டிய அந்த ‘கனடா ரிட்டர்ன்’ தொலைபேசியை வைத்துவிட்டாராம்.

இது நடந்தது ; கடந்த ஜனவரி 19ம் திகதி.

தமது ஆதரவாளர்களைத் தொடர்புகொண்ட சம்பந்தர் ‘நான் எல்லாம் அங்கே சொல்லிவிட்டேன்.. உடனோ கட்சி அலுவலகத்துக்குப் போய் நோமினேசனில கையெழுத்துப் போடுங்கோ..” என்றாராம்.

சம்பந்தர் ஐயா கூறியதைக்கேட்டு கட்சி அலுவலகம் சென்ற சம்பந்தன் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி.

அவர்கள் யாருடைய பெயரும் வேட்புமணுக்களில் இணைக்கப்படவில்லையாம்.

விடயத்தை சம்பந்தன் ஐயாவுக்கு அவர்கள் தெரிவிக்க, சம்பந்தன் ஐயா உடனடியாக ‘கனடா ரிட்ரேனுக்கு’ தொலைபேசி எடுக்க, கனடா ரிட்டேன் சம்பந்தரின் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லையாம்.

40 தடவைகளுக்கு மேல் சம்பந்தரும், அவருடைய மகனும் தொலைபேசியில் அழைத்தும் கனடா ரிட்டேர்ன் அந்த அழைப்புக்களை எடுக்கவேயில்லையாம்.

ஏன் சம்மந்தரின் தொலைபேசி அழைப்பை எடுத்து கதைக்கவில்லை ‘என்று ‘கனடா ரிட்டேனிடம்’ கேட்டபோது, “..கொழும்பிலே கட்டிலில் படுத்துக்கொண்டு திருகோணமலையில் அரசியல் செய்யமுடியாது..” என்று கடுப்பாகி கத்தினாராம்.

யாருக்கும் வராத துணிவு ‘கனடா ரிட்டேனுக்கு’ வந்ததில் திருகோணமலை கட்சிநிர்வாகிகளுக்கு மகிழச்சியாம்.

ஆனால், யாருமே செய்யாதை ஒன்றை ‘கனடா ரிட்டேன்’ தனக்குச் செய்துபோட்டுதே என்ற கவலையில் சம்பந்தருக்கு ‘பிரஷர்’ எக்கச்சக்கமாய் ஏறிவிட்டதாம்.