பொலிஸ் ஊரடங்கு – பொலிஸ் மா அதிபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி கொழும்பில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை பிரகடனப்படுத்தியமைக்காக பொலிஸ் மா அதிபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

நீதிபதிகள் பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு இரண்டு மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள் அனுமதி வழங்கியுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்புக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் மேல் மாகாணத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதை எதிர்த்து இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சிவில் சமூக ஊழியர் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் பாதுகாவலர். லட்சுமணன் சஞ்சீவ்

மனித உரிமைகள் சட்டத்தரணி ஆதம் லெப்பை ஆசாத், சிவில் சமூக செயற்பாட்டாளர் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் பாதுகாவலர்.லக்ஷ்மணன் சஞ்சீவ் ஆகியோர் பொலிஸ்மா அதிபரின் முடிவை சவாலுக்குட்படுத்தி 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுக்களை தாக்கல் செய்தனர்.

பொலிஸ்மா அதிபர் இவ்வாறு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததன் மூலம் அரசியலமைப்பின் கீழான பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம், அமைதியாக ஒன்று கூடும் சுதந்திரம் ஆகிய உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்களான ஆசாத் மற்றும் சஞ்சீவ் ஆகியோர் குறித்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான பிரதாப் வெலிகும்புர, திலான் நாலக, யசங்க சேனாதீர, சாமோடி விஜேவீர, திஷ்ய வேரகொட, ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் ஷிஃபான் மஹரூப் ஆகியோர் ஆஜராகினர்.

இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 திகதி அன்று விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.