உக்ரைன் பயன்படுத்தும் ஏவுகணைகள் – இணையத்தில் வெளியாகியுள்ள அமெரிக்காவின் இரகசிய ஆவணங்கள் தெரிவிப்பது என்ன?

உக்ரைனிடம் உள்ள ஏவுகணைகளும் வெடிமருந்துகளும் ஒருவாரகாலத்தில் முடிவடையலாம் என்ற இரகசிய தகவல் அமெரிக்காவின் ஆவணங்கள் அம்பலமானதன் காரணமாக உலகிற்கு தெரியவந்துள்ளது.

பெப்ரவரி இரண்டாம் திகதியிடப்பட்ட இரகசியமானது என குறிப்பிடப்பட்டுள்ள ஆவணமொன்று மே 2ம் திகதியன்று உக்ரைனின் சோவியத் காலத்தை சேர்ந்த எஸ் 300வான்வெளிப்பாதுகாப்பு பொறிமுறைகள் முடிவிற்கு வரலாம் என தெரிவித்துள்ளது.

தற்போதைய வேகத்தில் அவற்றை பயன்படுத்தினால் அவை மே 2ம் திகதியளவில் முடிவடைந்துவிடும் என அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கசிந்துள்ள பெண்டகனின் ஆவணங்களின் உண்மைதன்மையை உறுதி செய்யமுடியாத நிலை காணப்படுகின்றது இது குறித்து ஆராயந்துவருவதாக தெரிவித்துள்ளது.