மாணவனை கடத்தி சென்று கொடூரமாக தாக்கிய பெண் பொலிஸ் அதிகாரி

மாத்தறையில் காதல் உறவில் ஈடுபட்டதனால் தாக்கப்பட்டு காயமடைந்த 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கம்புருபிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்கும் மாணவனே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

குறித்த மாணவனை மற்றொரு குழுவுடன் இணைந்து பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது காரில் ஏற்றிச் சென்று மகளுடனான உறவை முறித்துக் கொள்ளுமாறு அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்த மாணவன் கம்புருபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.