நீதிபதி சரவணராஜா பதவி விலகல் அரசாங்கத்தின் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவாதமே – கஜேந்திரகுமார்

அண்மையில் நீதிவான் சரவணராஜாவுடைய பதவி விலகலும், நாட்டினை விட்டு வெளியேறி விடயமும் நாட்டினுடைய இன அடக்கு முறையை வெளிப்படுத்தி இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுவரைக்கும் இலங்கை உலகத்துக்கு தாங்கள் ஒரு ஜனநாயகத்தை பேணுகின்ற நாடாக காட்டிக்கொண்டு சட்டத்தின் ஆட்சியையும், நல்லாட்சியையும் கடைப்பிடிக்கின்ற ஒரு நாடாகவும், தமிழர் விவகாரமானது பயங்கரவாதத்துக்கு எதிரான செயல்பாடாகவும், அந்த வகையிலே பயங்கரவாதத்தை ஆதரிப்போரும் தொடர்ந்து 2009க்கு பிறகு மலர்வாக்கம் செய்கின்றவர்களுக்கு எதிராகவும் தான் தாங்கள் நடவடிக்கை எடுப்பதாகவும், ஆனால் அதை தாண்டி தாங்கள் முழுமையாக ஒரு நீதியையும் நியாயத்தையும் ஏற்று செயற்படுகின்ற ஒரு தரப்பாகத்தான் கட்டிக்கொண்டு வந்தார்கள்.

ஆனால் சரவணராஜா அவர்களுடைய பாதூப்பு இந்த கபட நாடகத்தை முற்று முழுதாக அம்பலப்படுத்துவதாகவும், அத்தோடு இலங்கையிலே தொடர்ந்தும் ஒரு சிங்கள பௌத்தத்துடைய இனவாத போக்கை தவிர்ந்த வேறு எந்தவொரு செயற்பாட்டிற்கும் இடமே கிடையாது. நீதித்துறை உட்பட அந்த சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு அடிணிந்து செயற்படுகின்ற, அதை கடைப்பிடிக்கின்ற பாதுகாக்கின்ற ஒரு துறையாக அமைந்துள்ளது.

ஆகவே தமிழர்களுக்கு அல்லது முஸ்லிம்களுக்கு அல்லது சிங்கள பௌத்தர்களுடைய நலன்கள் அல்லாத வேறு எந்தவொரு தரப்புக்கும் எதிராகவும் வந்து நீதியை நியாயத்தை தேட முடியாது என்ற விடயம் இந்த நீதிவான் சரவணராஜா உடைய பாதிப்பின் ஊடாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அவருக்கு எதிராக, அவரை குறி வைத்து அவர் உறுதியாகவும் துணிந்து ஒரு நீதிக்காக எடுத்த முடிவுகளுக்கு பாராட்டை தெரிவிக்கின்ற அதே நேரம், அவருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மிக மோசமான இனவாத செயற்பாடுகள், அச்சுறுத்தல்கள், அடிபணிய வைக்கக்கூடிய முயற்சிகள் போன்ற அனைத்தையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

அத்தோடு நானும் எங்களுடைய செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும், ஜெனீவாவினுடைய, ஐரோப்பிய நாடுகளுடைய தலைநகரங்களுக்கும் சென்றுகொண்டு இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்திலே நீதிவான் சரவணராஜாவுடைய இந்த சம்பவத்தை நாங்கள் இங்கு பதிவு செய்துகொண்டு வருகின்றோம்.எம்மை பொறுத்தவரையில் இது ஒரு கண்துடைக்கின்ற ஒரு செயற்பாடாகத்தான் சர்வதேச சமூகமும் பார்க்கும் என்றொரு கருத்தையும் நாங்கள் வைத்திருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.