விடுதலைப் புலிகள் அமைப்பின் வாலை மட்டுமே அழித்துள்ளதாக சிங்கள இனவாதி சரத் வீரசேகர ஒப்புகொண்டார்

விடுதலைப் புலிகள் அமைப்பின் வாலை மட்டுமே அழித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் சிங்கள கடும்போக்கு இனவாதியுமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்

அத்துடன் தமிழீழத்தை 13 இன் ஊடாக பெற்றுக் கொள்வதே புலம்பெயர் அமைப்புக்களின் இலக்காகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவில் நேற்று (12.10.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை நாம் பெரும்பாலும் அழித்துள்ளோம். ஆனால், நாம் விடுதலைப் புலிகள் அமைப்பின் வாலை மட்டும்தான் அழித்துள்ளோம்.

அதன் தலை உள்ளிட்ட ஏனைய பகுதிகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இன்னமும் செயற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.என சுட்டிகாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது