ஹர்த்தால் முழுமையாக வெற்றி பெற ஒத்துழைக்குமாறு தமிழ் அரசியல் கட்சிகள் பகிரங்க கோரிக்கை

நீதிபதி.ரி.சரவணராஜாவுக்கு நீதி வேண்டும், நீதித்துறையின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் உட்பட வடக்கு,கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு மறுக்கப்படும் நீதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்க் கட்சிகள் எதிர்வரும் 20ஆம் திகதி முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ள ஹர்தால் முழுமையாக வெற்றி பெறுவதற்கு அனைத்து தரப்புக்களும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென தமிழ் அரசியல் கட்சிகள் பகிரங்கமான கோரிக்கையை விடுத்துள்ளன.

இலங்கை தமிழ் அரசுக்கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போரளிகள் உள்ளிட்ட தரப்புக்களே மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளன.

குறித்த கட்சிகள் தெரிவித்துள்ளதாவது, ஆதவினை வழங்குமாறு கோரிநிற்கின்றோம்.

அத்துடன், வடக்கு,கிழக்கில் செயற்படுகின்ற மேற்படி தரப்புகளுடன் நாம் அடுத்துவரும் நாட்களில் ஆதரவினைக் கோரும் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளோம் என்று அக்கட்சிகள் குறிப்பிட்டன.

இதேவேளை, ஹர்தாலுக்கான ஆதவினையும் ஒத்துழைப்புக்களையும் பொதுக்களிடத்தில் கோருகின்ற துண்டுப்பிரசுர விநியோகமும் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அக்கட்சிகள் அறிவித்துள்ளன.