நேரத்தை நியாயமாக பகிர்ந்தளியுங்கள் : சபாநாயகரிடம் மைத்திரிபால கோரிக்கை!

கேள்வி நேரத்தின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நேரம் போதாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு 7 தொடக்கம் எட்டு நிமிடங்களே அவகாசம் தருவதாகக் கூறிய முன்னாள் ஜனாதிபதி, நேரத்தை நியாயமாகப் பகிர்ந்தளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இவ்வாறான நிலைமைகளால் எங்களது எம்.பி.க்கள் கடும் தர்மசங்கடத்துக்கு ஆளாகியுள்ளனர்.