பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக எரிசக்தி துறை நிபுணரான சுரத் ஓவிடிகம நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று அறிவித்துள்ளார்.

அமைச்சர் தனது சமூக வலைத்தளத்தில் இது தொடர்பில் தெரிவிக்கையில்,, சூரத் ஓவிட்டிகம 20 ஆண்டுகளுக்கும் மேலான சர்வதேச அனுபவத்தைக் கொண்ட எரிசக்தி துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர் என்றும் இங்கிலாந்து, நோர்வே வடக்கு கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு துறை மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பணியாற்றியுள்ளார்.

சுரத் ஓவிடிகம 2020 ஆம் ஆண்டு முதல் பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்து வந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

“எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு, கடல்சார் எரிசக்தி வளங்கள், தேசிய கொள்கைகள், சாலை வரைபடம், பாதுகாப்பு மற்றும் பசுமை ஹைட்ரஜனின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றை விரைவுபடுத்தவும் செயற்படுத்தவும் அவர் பணிபுரிவார்” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.