இடைக்காலக் குழுவை நீக்குமாறு மிரட்டல்! ஜனாதிபதி ரணில் மீது அமைச்சர் குற்றச்சாட்டு.

நியமிக்கப்பட்ட இடைக்கால கிரிக்கெட் குழுவை நீக்குமாறு அமைச்சரவையிலும், அதன் பின்னரும் ஜனாதிபதி ரணில் என்னை மிரட்டினார் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:- அமைச்சரவைக்குள் என்ன நடந்தது என்பதை என்னால் கூறமுடியாது.

நான் கூட்டுப் பொறுப்பை பாதுகாக்க விரும்புகிறேன். ஆனால், ஜனாதிபதி பின்னர் அலுவலகத்துக்கு அழைத்து நியமிக்கப்பட்ட குழுவை நீக்குமாறு கோபத்தோடு மிரட்டினார். இல்லையேல் விளையாட்டு அமைச்சையும் தன் கீழ் கொண்டு வருவேன் – என்றார். ‘என்னை நீக்கிவிட்டு உங்கள் விருப்பப்படி முடிவெடுங்கள் என ஜனாதிபதியிடம் கூறினேன். நியமிக்கப்பட்ட குழுவை நீக்கவே முடியாது என்றும் கூறினேன் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை மதிக்கின்றோம். ஆனால், மறுபடியும் மோசடிக்காரர்கள் தான் அங்கு செல்லவுள்ளனர் – என்றார்.